நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் மரியாதைக்குரிய நண்பரே! தமிழ் இணைய மாத இதழ் வலைமொழி உங்களை வரவேற்கிறது!

Saturday, October 07, 2006

இணைய தமிழ் இதழ்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து...

கட்டுரை, ஆய்வு, கவிதை, கதை, உரையாடல் போன்ற பல ஆக்கங்களுடன் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் இற்றைப்படுத்தப்பட்டு இணையத்தில் வெளிவரும் இதழ்கள் இணையத் தமிழ் இதழ்கள் ஆகும். இணையத் தமிழ் இதழ்கள் பிற இணையத்தளங்களில் (வலைவாசல்கள், சங்கம் அல்லது அமைப்பு சார் தளங்கள், தனிப்பட்டோர் பக்கங்கள், தகவல் தளங்கள் / இணைய நூல்கள், இணைய பொது சந்தி / குழுக்கள், தளத் தொகுப்புகள், வலைப்பதிவுகள், செய்தித் தளங்கள்) இருந்து சில முக்கிய வழிகளில் வேறு பட்டு நிற்கின்றன. அவ்வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டு இணையத் தமிழ் இதழ்களின் இலக்கணத்தை பின்வருமாறு வரையறை செய்யலாம்.

இணையத்தின் இயல்புகளை உள்வாங்கிய வடிமைப்பு.
(அச்சு இதழ்களின்) இணையப் பரிமாற்றம்.
நேர்த்தியான காலவரைக்குள் வலையேற்றம்.
பலவகை எழுத்தாளர்களின் படைப்புக்கள்.
சீரமைக்கப்பட்ட படைப்புக்கள்.
முதன்மையான உள்ளடக்கமாக செய்திகளை கொண்டிருக்காத தன்மை.


இணைய இதழ்களின் தனித்தன்மைகளை மனதில் கொண்டே அதேசமயம் வலைப்பதிவுகளின் இயக்கத் தன்மையை தன்னுள் கொண்டதாக வலைமொழி வலைப்பதிவு இதழ் தன் இயக்கத்தை ஆரம்பிக்க உள்ளது.

No comments:

வருகைக்கு நன்றி! வாசித்ததை விமர்சித்து செல்லுங்கள்!! அல்லது வாக்களித்து சொல்லுங்கள்!!!

*