நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும் மரியாதைக்குரிய நண்பரே! தமிழ் இணைய மாத இதழ் வலைமொழி உங்களை வரவேற்கிறது!

Monday, October 16, 2006

முக்கிய அறிவிப்பு!

நண்பர்களுக்கு வணக்கம்.

வலைமொழி என்ற தமிழ் இணைய சிற்றேடு மாத இதழாக மலர இருக்கிறது. இணைய படைப்பாளிகள் மற்றும் தமிழ் இலக்கிய படைப்பாளிகளின் படைப்புகள் இடம்பெற உள்ளன.

உங்கள் படைப்புகளை, அனுபவங்களை அல்லது சிந்தனைகளை கதை கவிதை கட்டுரை என எந்த வடிவிலும் படைப்பாக்கம் செய்து valaimozhi@gmail.com என்ற மின்முகவரிக்கு அனுப்புங்கள்.

நகைச்சுவையான படைப்புகளும் வரவேற்கப் படுகின்றன.இப்போதே சிந்தியுங்கள். படைப்பாக்கம் செய்து அனுப்புங்கள்.

அன்புடன்
வலைமொழி இதழ்க்குழு.

7 comments:

நாகை சிவா said...

முயற்சி வெற்றி அடைய வாழ்த்துக்கள்

www.valaimozhi.in said...

நன்றி சிவா!

படைப்புகளை அனுப்புங்கள்! நணபர்களுக்கும் சொல்லுங்கள் நண்பர்களே!

கோவி.கண்ணன் [GK] said...

நல்வாழ்த்துக்கள் !

படைப்புகளை அவ்வபோது வலையிலிருந்து எடுத்துக் கொள்ளுங்கள் !

http://kaalangkal.blogspot.com

அன்புடன்
கோவி.கண்ணன்

www.valaimozhi.in said...

நன்றி GK

படைப்புகளை வலையிலிருந்து எடுத்துக்கொள்வது உசிதமாகப் படவில்லை. இது வெறும் தொகுப்பு இதழல்ல. படைப்புக்கள் கூடுமானவரை வேறு எங்கும் வெளியிடப் படாதவையாக இருப்பது அவசியம். மிக அவசியமான தருணங்களில் மட்டும் பிற படைப்புகள் தேர்வு செய்யப்படும்.

மற்றபடி படைப்பாளர்கள் புதிதாக எழுதிய அல்லது இதுவரை வெளியிடப் படாத படைப்புகளை அனுப்ப வேண்டுகிறோம். இதழில் வெளியான பிறகு தங்கள் பதிவுகளில் வெளியிட்டுக்கொள்ளலாம்.

மற்றொரு குறிப்பு:

புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் நண்பர்கள் அந்தந்த நாட்டில் தங்கள் அனுபவங்களை எழுதலாம். ஈழத்தில் உள்ளாட்சி முறைபற்றி ஈழத்தமிழர்கள் எழுதலாம்.

www.valaimozhi.in said...

Gk கூறிய ஆலோசனையை முன்வைத்து ஒரு சிறு திருத்தம்.

1-1-2005 க்கு முன்னதாக வலையில் வெளியிடப்பட்ட படைப்புகள் தலைப்புக்கு பொருத்தமானதாக, அவசியமானதாக தோன்றினால் அந்தந்த படைப்பாளர்கள் சுட்டியை மின்னஞ்சலில் அனுப்பலாம். தேர்வு செய்தது வேறொருவர் எனில் படைப்பாளியின் ஒப்புதல் பெற்றபின் அனுப்பவும்.

கோவை ரவீ said...

வாழ்த்துக்கள் -- கோவை ரவீ

www.valaimozhi.in said...

வாழ்த்துக்களுக்கு நன்றி.
படைப்புகளை விரைந்து அனுப்புங்கள் நண்பர்களே!

வருகைக்கு நன்றி! வாசித்ததை விமர்சித்து செல்லுங்கள்!! அல்லது வாக்களித்து சொல்லுங்கள்!!!

*